பயன்பாட்டுக்கு வராத சுகாதார வளாகம்

Update: 2026-09-06 10:30 GMT

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் ஸ்ரீபுரந்தான் கிராமம் 6-வது வார்டு காலனி தெருவில் கட்டப்பட்ட பொது சுகாதார வளாகம் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமலும், சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழலாலும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி, பூட்டிக்கிடக்கும் பொது சுகாதார வளாகத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்