ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் பகுதியில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சாலையில் திரிகின்றன. இந்த தெருநாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்துகின்றன. மேலும் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு குறுக்கே பாய்கின்றன. நாய்களால் பொதுமக்கள் சிலர் வீட்டை விட்டு வெளியே வர அச்சமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.