அங்கன்வாடியில் தெருநாய்கள் தொல்லை

Update: 2026-08-30 10:30 GMT

திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் அப்பனநல்லூர் ஊராட்சி சாலப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மற்றும் தொடக்கப்பள்ளி வளாகத்திற்குள் தெருநாய்கள் கூட்டமாக சுற்றித் திரிவதால் மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி, பெற்றோர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளி வளாகத்தில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்