பொதுமக்கள் அவதி

Update: 2026-08-30 10:30 GMT

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சியில் உள்ள மயானம் அடிப்படை வசதிகள் இன்றி, சீமைக்கருவேல மரங்கள் முளைத்து, குண்டும், குழியுமான சாலையுடன் வனப்பகுதி போலக் காட்சியளிக்கிறது. மேலும் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய வரும் பொதுமக்கள் தண்ணீர் வசதி மற்றும் நிழல் இன்றி கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே அப்பகுதியில் சமத்துவ சுடுகாடு அமைத்துத் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்