பாழடைந்த துணை சுகாதார நிலையம்

Update: 2026-08-23 19:26 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் விளாப்பாக்கம் துணை சுகாதார நிலையம் மந்தவெளி பகுதியில் செயல்பட்டு வந்தது. அது, கடந்த 20 ஆண்டுகளாக சரியாக செயல்படவில்லை. அதற்கு பதிலாக விளாப்பாக்கம் பஸ் நிலையம் அருகில் பேரூராட்சிக்கு சொந்தமான கடை ஒன்றில் தற்காலிகமாக செயல்படுவதாக பெயர் பலகை வைத்துள்ளனர். அந்தப் பெயர் பலகை வைத்துள்ள இடத்திலும் துணை சுகாதார நிலையம் செயல்படுகிறதா? என மக்களுக்கு தெரியவில்லை. பாழடைந்த நிலையில் இருக்கும் விளாப்பாக்கம் துணை சுகாதார நிலைய கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு புதிய கட்டிடம் மீண்டும் செயல்பட மருத்துவத்துறை, உள்ளாட்சி பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வேல்முருகன், விளாப்பாக்கம்.

மேலும் செய்திகள்