ஆரணி-ஆற்காடு நெடுஞ்சாலையில் இரும்பேடு கூட்ரோடு பகுதியில் இருந்து ஏரி வரை செல்லக்கூடிய பகுதியில் உள்ள பக்கக் கால்வாய் அனைத்தும் தூர்வாரப்படாததால் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. மழைப் பெய்தாலும் முறையாக ஏரியில் தண்ணீர் போகாது, மழை தண்ணீரும் சாலையில் வழிந்தோடி வீணாகும் அவல நிலை உள்ளது. ஊராட்சி நிர்வாகம் ஏரிக்கு செல்லக்கூடிய கால்வாயை முறையாக அகலப் படுத்தி தூர்வார வேண்டும். மழைநீர், கழிவுநீர் அனைத்தும் ஏரியில் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
-மனோபாலா, இரும்பேடு.