கடலூர் துறைமுகம் அடுத்த பச்சையாங்குப்பம் ரெயில்வே மேம்பாலத்தில் உள்ள மின்விளக்குகள் பழுதடைந்து எரியாமல் இருப்பதால் இரவில் அப்பகுதியில் வாகன விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவானது. இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேம்பாலத்தின் இருபுறமும் மின்விளக்குகளை சீரமைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் வாகனஓட்டிகள் தினத்தந்திக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.