மதுரை நகர் காளவாசல்-விளாங்குடி மற்றும் திண்டுக்கல் செல்லும் சாலையில் சில இளைஞர்கள் ஆபத்தை உணராமல் இருசக்கர வாகனங்களை அதிவேகத்தில் இயக்கி செல்கின்றனர். இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் குறிப்பாக அப்பகுதி கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் சாலையை கடக்க மிகவும் அச்சமடைகின்றனர். மேலும் எதிரே வரும் பிற வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கும் அபாயம் அதிகளவில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட சாலையில் அதிவேகத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.