கந்தம்பாளையத்திற்கு உட்பட்ட நல்லூரில் கடந்த 1927-ம் ஆண்டு போலீஸ் நிலையம் அமைக்கப்பட்டது. 149 கிராமங்கள் நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்டு உள்ளன. இந்தநிலையில் மணியனூர், நல்லூர், வசந்தபுரம் ஆகிய இடங்களில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. மேலும் நல்லூர் பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.