ராமநாதபுரம் மாவட்டம் வேந்தோணி கிராமம் குமரக்குடி நெசவாளர் காலனி பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்த வண்ணம் உள்ளது. நாய்கள் அப்பகுதி பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், பள்ளி குழந்தைகளை துரத்தி சென்று கடிக்கின்றது. மேலும் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு குறுக்கே பாய்ந்து விபத்தையும் ஏற்படுத்தி செல்வதால் மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்குமா?