கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த தெருநாய்கள் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகளை துரத்தி சென்று கடிக்கின்றன. இதனால் சிலர் நாய்க்கடியால் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்படுகிறார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.