காந்திபுரம் தேவி கருமாரியம்மன் கோவில் அருகே மின்சார கம்பம் அமைந்துள்ளது. அந்த கம்பத்தில் இருந்து செல்லும் மின்சார ஒயர்கள் மீது அங்குள்ள மரக்கிளைகள் படர்ந்து காணப்படுகிறது. இதனால் மின்சார தாக்குதல் ஏற்படலாம் என்று அப்பகுதியினர் சற்று அச்சத்துடன் இருந்து வருகின்றனர். எனவே அங்குள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்த மின்வாரி துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?