பெரம்பலூர் நான்கு பிரிவு சாலையில் அனைத்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் நின்று செல்வதால் வெளியூர்களில் இருந்து அதிகளவில் பயணிகள் வந்து செல்கின்றனர். அங்கு அடிப்படை கழிவறை வசதிகள் இல்லாத காரணத்தால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். எனவே பயணிகளின் நலன்கருதி அப்பகுதியில் உடனடியாக கழிவறை வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.