வியாபாரிகளை அச்சுறுத்தும் தெருநாய்கள்

Update: 2026-08-23 12:11 GMT

அரியலூர் மார்க்கெட் தெருவிற்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பொருட்கள் வாங்குவதற்காக வருகின்றனர். இந்த நிலையில், இங்கு அதிகளவில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றுகின்றன. இவை அங்கு வரும் வியாபாரிகளையும், பொதுமக்களையும் அச்சுறுத்தும் வகையிலும், விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையின் குறுக்கே சென்று வருகின்றன. மேலும் அவர்களை கடிக்கவும் பாய்கின்றன. எனவே இங்குள்ள தெருநாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்