புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் புள்ளான்விடுதி ஊராட்சி பகுதியில் சுற்றிவரும் தெருநாய்கள் பள்ளிக் குழந்தைகளை கடித்து காயப்படுத்தி வருகின்றன. இதனால் அச்சமடைந்த சிறுவர்கள் பள்ளிக்கு செல்ல மிகவும் பயப்படுகின்றனர். பொதுமக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் தெருநாய்களை கட்டுப்படுத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.