குரங்குகள் தொல்லை

Update: 2026-08-23 12:01 GMT

கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட படவேடு கிராமத்தில் அதிகமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. அவை பொதுமக்களையும், சிறுவர், சிறுமிகளையும் அச்சுறுத்தி வருகின்றன. மக்களுக்கு தொல்லை கொடுத்துவரும் குரங்குகள் கேபிள் ஒயர், மின் ஒயர்களில் நடந்தும், தொங்கி கொண்டும் செல்கின்றன. அந்த நேரத்தில் ஒயர்களை அறுத்து விடுகின்றன. மொட்டை மாடிகளில் துணிகளை உலர வைத்தால் அவைகளை தூக்கி கொண்டு ஓடி விடுகின்றன. அடிக்கடி மக்களின் உடைமைகளை சேதப்படுத்தும் குரங்குகளை வனத்துறையினர் பிடித்து காட்டில் விட வேண்டும்.

-கவுசல்யா, படவேடு. 

மேலும் செய்திகள்