பயணிகள் சிரமம்

Update: 2026-08-23 16:08 GMT

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதி விளாச்சேரி பஸ் நிறுத்தத்தில் இருந்து மொட்டை மலைக்கும் , சீனிவாசா காலனிக்கும் சாலைகள் பிரிந்து செல்கின்றது. இந்த இடத்தில் ஊர் பெயர் குறிப்பிடும் வழிகாட்டி பெயர் பலகை இல்லாததால் வெளியூரில் இருந்து வரும்  பயணிகள் குழப்பமடைந்து பாதை மாறிச்சென்று சிரமமடைகின்றனர். எனவே வெளியூர் பயணிகள் நலன் கருதி மேற்கண்ட பஸ் நிறுத்த பகுதியில் அதிகாரிகள் வழிகாட்டி பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்