கேப்பர் மலை, வடுகப்பாளையம் ஆகிய பகுதிகளில் அதிகளவில் மாடுகள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இரவு வேளையில் சாலையிலேயே மாடுகள் படுத்து கிடப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.