குளத்தை தூர்வார வேண்டும்

Update: 2026-08-09 11:46 GMT

உண்ணாமலைகடை பேரூராட்சிக்கு உள்பட்ட 15-வது வார்டில் தாமரைக்குளம் உள்ளது. இந்த குளத்தை கொல்லன்விளாகம், காஞ்சிரகோடு, இறஞ்சிலி, பூவன்கினான்விளை ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குளிப்பதற்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்தி வந்தனர். ஆனால் முறையாக பராமரிக்காததால் குளம் முழுவதும் ஆகாயதாமரைச்செடிகள் வளர்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜாண் ஜெய சிங், காஞ்சிரகோடு.

மேலும் செய்திகள்