சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் இப்பகுதி குடியிருப்பு வாசிகள் குறிப்பாக குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் இரவு நேரங்களில் சரியான தூக்கமின்றி அவதியடைகின்றனர். மேலும் கொசுக்களால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ள முன்வருமா?