ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்லும் வாகனஓட்டிகளை துரத்தி சென்று கடிக்கின்றன. இதனால் பாதசாரிகள், வாகனஓட்டிகள் அச்சத்துடனே சாலையில் பயணிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.