தெருநாய்கள் தொல்லை

Update: 2026-08-02 14:00 GMT

தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதிகளில் உள்ள ஒவ்வொரு தெருக்களிலும் குறைந்தது 10 தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. அதிலும் ஆர்.எம்.ரோடு, பாரஸ்ட் ரோடு, பிள்ளையார் கோவில் தெரு, வினோபாஜி தெரு, சேலம் ரோடு ஆகிய பகுதிகளில் அதிகளவில் தெருநாய்கள் தொல்லை உள்ளது. கூட்டமாக திரியும் நாய்களால், நடந்து செல்லவே மக்கள் அச்சப்படுகின்றனர். சாலைகளின் குறுக்கே நாய்கள் ஓடுவதால் வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த பேரூராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்