கூடலூர் தாலுகா தேவாலா அருேக கைதகொல்லி கிராமத்தில் சாலையோரத்தில் ராட்சத மரம் ஒன்று நிற்கிறது. அந்த மரம் பட்டுப்ேபான நிலையில் உள்ளது. அத்துடன் மற்றொரு மரத்தின் மீது சாய்ந்து விழும் நிலையில் இருக்கிறது. இதனால் பலத்த காற்று மற்றும் மழையின்போது அந்த 2 மரங்களும் அருகில் உள்ள வீடுகள் மீது விழும் அபாயம் காணப்படுகிறது. இதன் காரணமாக அங்கு வசித்து வரும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே அந்த பட்டுப்போன மரத்தை உடனடியாக வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.