மேல்புறம் சந்திப்பிலிருந்து அருமனை செல்லும் சாலையில் உத்தரங்கோடு சந்திப்பு பகுதி உள்ளது. இந்த சந்திப்பில் 3 சாலைகள் சந்திக்கும் ஆபத்தான வளைவுகளை கொண்ட பகுதியாகும் . இந்த பகுதியில் அரசு பள்ளியும் உள்ளது. இந்த வளையில் சாலையின் நடுவில் மையத்தடுப்புச்சுவர் அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால் வேகமாக வரும் வாகனங்களால் பள்ளி மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அந்த வளையில் சாலையின் நடுவே மையத்தடுப்பு சுவர் அமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஜெஸ்பின், சிராயன்குழி.