பழைய வாகனங்கள் அப்புறப்படுத்தப்படுமா?

Update: 2026-08-02 10:03 GMT

கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் பழைய அரசு வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. அவை ஆண்டுக்கணக்கில் பயன்படுத்தப்படாமல் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன. இதனால் அவை மேலும் பழுதடைந்து வீணாகும் நிலை உள்ளது. அரசுக்கும் எந்தவித பயனும் இல்லை. மேலும் அங்கு வேறு வாகனங்களை நிறுத்தவும் இடவசதி இல்லாமல் போகிறது. எனவே அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள பழைய அரசு வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்