கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ஒருங்கிணைந்த ரத்த பரிசோதனை மையத்தில் கழிப்பறை வசதி இல்லை. இதனால் அங்கு சிறுநீர் மாதிரி சேகரிப்பதற்காக வரும் நோயாளிகள் மாதிரி சேகரிக்க முடியாமல் பக்கத்து கட்டிடத்தில் உள்ள கழிப்பறைக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே ரத்த பரிசோதனை மையத்தில் கழிப்பறை வசதியை விரைந்து ஏற்படுத்த வேண்டும்.