போக்குவரத்து நெரிசல்

Update: 2026-07-26 17:02 GMT

சாத்தூர் நகர் பகுதியில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் அன்றாடம் அவ்வழியே பயணிக்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் போக்குவரத்து நெரிசலால் செல்லும் இடங்களுக்கு நேரத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலை உருவாகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  மேற்கண்ட பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்