புதுக்கோட்டை - திருச்சி சாலையில் உள்ள சிப்காட் நகர் பகுதியில் ஏராளமான முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகரித்து, பொதுமக்களுக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சிப்காட் நகரில் உள்ள முட்புதர்களை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.