கொல்லிமலையில் சோளக்காட்டில் அரசு பயணியர் மாளிகை உள்ளது. அதன் ஒரு பகுதி வளாகம் சாலை ஓரத்தில் காணப்படுகிறது. அவற்றை பசுமையாக்கி சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் தயார் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அந்த பசுமை வளாகத்தை தற்போது அங்குள்ள மது பிரியர்கள் திறந்த வெளிபாராக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அங்கு குப்பை கூளங்கள் சேர்ந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இது தடுக்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.