வாகன ஓட்டிகள் அவதி

Update: 2026-07-26 13:56 GMT

அரியலூர் மாவட்டத்தில் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், டிப்பர் லாரிகள் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பே போட்டி போட்டு கொண்டு செல்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அஸ்தினாபுரம் கிராமத்தில் நான்கு வழிச்சாலை பணியின்போது லாரிகள் மின்னல் வேகத்தில் செல்வதால் அதிகளவில் புழுதி பறந்து வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே, விதிகளை மீறி இயங்கும் டிப்பர் லாரிகள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்