அரியலூர் மாவட்டம், ரெட்டிபாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட முனியங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களின் நலனுக்காக அமைக்கப்பட்ட சிமெண்டு சாலையின் இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. அருகில் ரேஷன் கடை மற்றும் நூலகம் உள்ள இப்பகுதியில், நடந்து செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, சாலையோரம் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.