தர்மபுரி மாவட்டம் பாளையம்புதூர் ஊராட்சிக்குட்பட்ட காமராஜ் நகரில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், 500-க்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் சுடுகாடு வசதி இல்லை. இப்பகுதி மக்கள் இறந்தவர்களை புதைக்கும் வழக்கம் கொண்டவர்களாக உள்ள நிலையில், சுடுகாடு இல்லாமல் வீட்டருகே உள்ள சொந்த நிலங்களில் இறந்த உறவினர்களை அடக்கம் செய்து, சமாதி கட்டி வருகின்றனர். மேலும் சுடுகாடு வசதி கோரி, பல ஆண்டுகளாக மனுக்கள் அளித்தும், போராட்டம் நடத்தியும், இதுவரை அரசு செவி சாய்க்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் சுடுகாடு அமைக்க இடம் ஒதுக்கிதர நடவடிக்கை எடுக்குமா?