காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியர் உள்பட 4 ஆசிரியர்கள் மற்றும் 5 பகுதி நேர ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வருவதால் ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. மாணவர்களின் நலன் கருதி போதிய அளவு ஆசிரியர்களை பணியமர்த்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.