தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள பொதுமக்கள் சட்ட ஒழுங்கு பிரச்சினையை தீர்க்க மொரப்பூர் போலீஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த போலீஸ் நிலையத்தில் சுற்றுச்சுவர் இல்லை. இதனால் போதிய பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே பொதுமக்களை சட்டம் ஒழுங்குப் பிரச்சினையில் இருந்து பாதுகாக்கும் மொரப்பூர் போலீஸ் நிலையத்திற்கு சுற்றுச்சுவர் கட்ட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.