கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முக்கிய சாலைகள், தெருக்களில் நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் நடந்து செல்லும் குழந்தைகள், முதியோர்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் வாகன ஓட்டிகள் சிலர் விபத்தில் சிக்குகின்றனர். நாய்க்கடியால் சிலர் அவதிப்பட்டும் வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்துவார்களா?