மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவைகள் அவ்வழியே செல்லும் பாதசாரிகளை துரத்தி சென்று கடிப்பதால் பள்ளி மாணவர்கள் மற்றும் பெண்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். மேலும் சாலையில் செல்லும் வாகனங்களின் குறுக்கே பாய்ந்து விபத்துகளையும் ஏற்படுத்தி வருகிறத. எனவே, பொதுமக்கள் நலன்கருதி தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.