தெருநாய்கள் தொல்லை

Update: 2026-07-19 14:07 GMT

கரூர் மாவட்டம் தோரணக்கல்பட்டி, நேருநகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. இந்த நாய்கள் பகலில் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் தங்கிவிட்டு, இரவு நேரங்களில் குடியிருப்பின் கீழ் தள நடைபாதையில் கூட்டமாகக் கூடி அசுத்தம் செய்து வருகின்றன. மேலும், நள்ளிரவில் நாய்கள் ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொண்டு குறைப்பதால், பொதுமக்களின் தூக்கம் முற்றிலும் கெட்டுப் போகிறது. எனவே, பொதுமக்களின் சுகாதாரத்தையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, இந்த தெருநாய்களை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்