ஒரே மருத்துவரை நியமிக்க வேண்டும்

Update: 2026-07-19 12:24 GMT

கரூர் மாவட்டம் காந்தி கிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினந்தோறும் புறநோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். இதனால், ஒரு மருத்துவர் பரிந்துரைக்கும் எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனைகளை எடுத்துக்கொண்டு அடுத்த நாள் வரும்போது வேறொரு மருத்துவர் அங்கு பணியில் உள்ளார். புதிய மருத்துவர்கள் நோயாளிகளின் முந்தைய விவரங்களை சரிவர விசாரிக்காமல் தற்காலிகமாக மருந்துச் சீட்டுகளை வழங்கி அனுப்பிவிடுகின்றனர். எனவே, நோயாளிகளின் தொடர் சிகிச்சை நலன் கருதி வாரம் முழுவதும் ஒரே மருத்துவர் புறநோயாளிகளை பார்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்