மருத்துவர் நியமிக்கப்படுவாரா?

Update: 2026-07-19 12:20 GMT

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா அண்டக்குளம் கிராமத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில் தற்சமயம் மருத்துவர் இல்லாததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களின் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். சுற்றுப்புறத்தில் ஏராளமான கிராமங்களை கொண்ட இப்பகுதியில் கால்நடைகளை நம்பியே பெரும்பாலான ஏழை, எளிய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவசர காலங்களில் கால்நடைகளுக்கு மருத்துவ உதவி கிடைக்காததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் உள்ளது. எனவே, இந்த கால்நடை மருத்துவமனைக்கு உடனடியாக நிரந்தர மருத்துவரை நியமிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்