புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள பஸ் நிலையத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அமருவதற்கு போதிய இருக்கை வசதிகள் இல்லை. இதனால் முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் நீண்ட நேரம் நிற்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பயணிகளின் நலன் கருதி பஸ் நிலையத்தில் போதிய இருக்கைகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.