கூடுதல் கட்டிடம் கட்ட கோரிக்கை

Update: 2026-07-19 12:14 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பல ஆண்டுகளாக தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்த முழுநேர நூலகம், கடந்த ஓராண்டாக சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இருப்பினும், இங்கு போதிய இடவசதி இல்லாததால் நூற்றுக்கணக்கான புத்தகங்களும், கணினிகளும் மாடிப்படிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள நூலகக் கட்டிடத்தை சுற்றிலும் கூடுதல் இடவசதி உள்ள நிலையில், இட நெருக்கடியை கருத்தில் கொண்டு, அங்கு கூடுதல் கட்டிடம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்