மரக்கிளைகளை கவாத்து செய்ய நடவடிக்கை

Update: 2026-07-19 12:13 GMT

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் மருவத்தூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மரங்கள் உள்ளன. தற்போது ஆடி மாதக் காற்று வேகமாக வீசுவதால், இந்த மரங்களின் கிளைகள் முறிந்து விழும் அபாயகரமான நிலையில் உள்ளது. பள்ளி வளாகத்தில் கிளைகள் முறிந்து விழுந்தால் அங்கு நடமாடும் மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் முன் மரக்கிளைகளை கவாத்து செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்