திருவள்ளூர் மாவட்டம், செம்பரம்பாக்கம் அடுத்த மேப்பூர் கிராமத்தில், இரவு நேரங்களில் மர்ம நபர்கள் சில இடங்களில் தீ பற்ற வைக்கின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டமாக காணப்படுகிறது. மேலும் காற்று மாசு ஏற்பட்டு, அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கேடு விளைவிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.