‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2026-06-28 13:46 GMT

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலூர் தகரக்கொட்டகை பகுதியில் பல ஆண்டுகளாகப் பயணிகள் நிழற்குடை இல்லாமல் பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் தவித்து வந்தனர். இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தற்போது புதிய பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளனர். இதற்கு செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்