சுகாதார சீர்கேடு

Update: 2026-06-28 12:07 GMT

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் தேவையூர் ஊராட்சி, ரஞ்சன்குடி கோட்டை அருகே சிலர் திறந்தவெளியில் காலைக்கடன் கழிப்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. இதனால் கோட்டையைச் சுற்றிப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் மிகுந்த அவதிக்குள்ளாகி வரும் நிலையில், அதிகாரிகள் ஆய்வுக்காக வரும்போது மட்டும் அந்த இடம் தற்காலிகமாகச் சுத்தம் செய்யப்படுவதாகக் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இந்த சுற்றுலாத் தலத்தின் சுகாதாரத்தைக் காக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்