தெருநாய்கள் தொல்லை

Update: 2026-06-28 11:16 GMT

திருச்சி மாவட்டம் காந்தி நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் சமீபகாலமாக தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், மாநகராட்சி ஊழியர்கள் நாய்களைப் பிடித்துச் செல்வதும், மீண்டும் தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பதும் தொடர்கதையாகிவிட்டது. இதனால், இரவில் நாய்கள் அதிக அளவில் சத்தம் போடுவதாலும், தெருவில் நடந்து செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகளைத் துரத்துவதாலும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, காந்தி நகர் மட்டுமின்றி திருச்சி மாநகராட்சியின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள தெருநாய்களைக் கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்