ஊராட்சியுடன் இணைக்க கோரிக்கை

Update: 2026-06-28 11:17 GMT

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் முதலிப்பட்டி ஊராட்சியை சேர்ந்த கிளாங்காடு வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட அருத்தோடிப்பட்டி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கிராமம் முதலிப்பட்டி ஊராட்சியில் இணைக்கப்படாமல் உள்ளதால், கிராமத்தின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் உள்ளூர் நிர்வாகச் செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்படுகிறது. இதனால், அடிப்படைத் தேவைகளைப் பெறுவதிலும், நிர்வாக ரீதியான பணிகளை மேற்கொள்வதிலும் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, அருத்தோடிப்பட்டி கிராமத்தை முதலிப்பட்டி ஊராட்சியில் இணைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்