புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் நுழைவாயிலில் மழைக்காலங்களில் மழைநீர் வடிய வழியின்றி தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. மேலும், பள்ளி தொடங்கும் மற்றும் முடியும் நேரங்களில் இந்த நீர் தேக்கம் அப்படியே தேங்கி நிற்கிறது. இதனால், பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு உள்ளே சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டு பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, பள்ளி நுழைவாயிலில் மழைநீர் தேங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.