திருச்சி மாவட்டம் வையம்பட்டி ரெயில்வே நிலையம் செல்லும் சாலையில் மதுக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மதுக்கடையின் இருபுறமும் அரசுப் பள்ளியும், தனியார் பள்ளியும் மிக அருகிலேயே அமைந்துள்ளன. இதனால், அவ்வழியாக தினந்தோறும் பள்ளிக்குச் சென்று வரும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பற்ற சூழலால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்படும் முன், பள்ளிகள் அருகே உள்ள இந்த மதுக்கடையை உடனடியாக அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.