விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பஸ் நிறுத்தம் மற்றும் ரெயில் நிலையம் பகுதியில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் அவ்வழியே செல்லும் பொதுமக்கள், குறிப்பாக ஊருக்கு வரும் பயணிகளை பார்த்து குரைப்பது, துரத்தி சென்று கடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் அச்சமடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இவ்வாறு தொடர் தொல்லைகளை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.